விடுமுறையில் மாணவர்களை ஃப்ரீயா விடுங்க... சிறப்பு வகுப்புகளுக்கு தடை

காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில், சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகளில் 10,11,12 ம் வகுப்பு மாணவர்கள் உட்பட மற்ற வகுப்பு மாணவர்களுக்கும், காலாண்டு தேர்வுகள் நடந து வருகின்றன. வரும் 22 ம் தேதியுடன் தேர்வுகள் முடிந்து, 23 முதல், அக்டோபர் 2 ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன், பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். "பள்ளி துவங்கும் முன்பும், சிறப்பு வகுப்புகள் எடுப்பதால், மாணவர்கள் அதிக மன அழுத்தத்துக்கு ஆளாகுகின்றனர்"

"அதிக நேரம் பள்ளியில் செலவழிப்பதால், உடல் ரீதியாகவும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். பள்ளி நேரத்தில் மட்டும், வகுப்புகள் இயங்கினால் போதும். உத்தரவை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

More News >>