கேல் ரத்னா விருது: கோலி, மீராபாய் பெயர்கள் பரிந்துரை!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் வெயிட் லிஃப்டிங் வீராங்கனை மீராபாய் சானுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
விளையாட்டுத்துறையில் சிறந்த விளங்கும் வீரர்களுக்கு மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரால் கேல் ரத்னா விருது மத்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடியும் வழி நடத்தியும் வரும் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலிக்கும், காமன்வெல்த் 2018, போட்டியில் முதன்முறையாக வெயிட் லிஃப்டிங்கில் இந்தியாவுக்கு தங்கம் வென்ற வீராங்கனை மீராபாய் சானுவிற்கும் கேல் ரத்னா விருதினை வழங்க மத்திய அரசுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
மேலும், இப்பரிந்துரை மத்திய அரசு ஏற்றுக் கொண்டதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.