தாலியை கழற்றிவிட்டு தேர்வா..?என்ன கொடுமை சார் இது!
நம் தமிழகத்தில் TNPSC வருடம் தோறும் எழுதுவது வழக்கம். தேர்விற்காக இதுவரை எந்த கடுமையான கட்டுபாடுகளையும் தமிழக அரசு விதித்ததில்லை. ஆனால் தெலங்கானா மாவட்டத்தில் தாலி கயிற்றை கழற்றிவிட்டு தேர்வு எழுத சொன்னது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில் மாநில அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் TSPSC நடத்தும் கிராம வருவாய் அதிகாரி தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் சுமார் 700 காலியிடங்களுக்கு 10 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். மொத்தம் 2,000 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
நார்சபூரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் தேர்வு எழுதுவதற்காக வந்த திருமணமான பெண்களை, தங்கள் தாலியைக் கழற்றினால்தான் தேர்வு எழுத உள்ளே அனுமதிக்க முடியும் என கட்டாயப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. பலரும் இதனை ஏற்க மறுத்து அவர்களை கெஞ்சியபோது, நீங்கள் தாலியைக் கழற்றிய பின்னரே தேர்வு எழுத முடியும் என்று கூறியமையால், தாலியைக் கழற்றி கணவரிடம் கொடுத்துவிட்டு தேர்வு எழுதச் சென்றுள்ளனர்.
குறிப்பிட்டு சொல்கையில் இந்த ஒரு தேர்வு மையத்தில் மட்டும் 290 திருமணமான பெண்கள் இவ்வாறு தாலியைக் கழற்றிவிட்டு தேர்வு எழுத சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.