ஆசிய கோப்பை: இலங்கைக்கு 250 ரன்கள் இலக்கு !

ஆசிய கோப்பையின் இன்றைய போட்டியில், இலங்கை அணிக்கு ஆப்கனிஸ்தான் அணி 250 ரன்கள் இலக்கை நிர்ணயித்துள்ளது.

அபுதாபியின் ஷேக் சையது ஸ்டேடியத்தில் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் இன்றைய போட்டியில், டாஸ் வென்ற ஆப்கன் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

50 ஓவர் முடிவில் 249 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து ஆல்-அவுட் ஆனது ஆப்கனிஸ்தான்.

அந்த அணியில், அதிகபட்சமாக ரகமத் ஷா 72 ரன்கள் விளாசினார்.

ஆப்கன் ஸ்கோர்கார்டு:

முகமது ஷாசாத் (34), இஷானுல்லா ஜனத் (45), ரகமத் ஷா (72), அஸ்கர் அஃப்கன் (1), ஹஸ்மத்துல்லா ஷாயிதி (37), முகமது நபி (15), நஜ்புல்லா ஜத்ரன் (12), குல்பதின் நயிப் (4), ரஷித் கான் (13), அஃப்டப் அலம் (7), முஜிப் உர் ரஹ்மான் (0).

திசாரா அபாரம்:

இலங்கை சார்பில் திசரா பெரெரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அகிலா தனஞ்செயா 2 விக்கெட்டுகளையும், லசித் மலிங்கா, துஷ்மந்த சமீரா, சேஹன் ஜெயசூர்யா ஆகிய மூவரும் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

வெல்லுமா இலங்கை:

முதல் ஆட்டத்தில் பங்களாதேஷுடன் தோற்ற இலங்கை இரண்டாம் போட்டியான இன்று வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், இலங்கை ரசிகர்களுக்கு இந்த போட்டி நிச்சயம் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை!

More News >>