அர்ஜுனா விருது... ஹீமா தாஸ், ஸ்மிருதி மந்தனா பெயர்கள் பரிந்துரை
இந்தாண்டு வழங்கவுள்ள அர்ஜுனா விருதுக்கு ஹீமா தாஸ், ஸ்மிருதி மந்தனா உள்பட 20 வீரர், வீராங்கனைகளின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
மத்திய அரசால் ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சிறந்த விளங்கும் வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம்.
இந்த விருதுக்கான பெயரை அந்தந்த விளையாட்டு சங்கங்கள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யும். வீரர்களின் செயல்பாட்டை ஆராய்ந்து மத்திய அமைச்சகம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும்.
இந்நிலையில், ஹீமா தாஸ், ஸ்மிருதி மந்தனா உள்பட 20 வீரர், வீராங்கனைகளின் பெயர்கள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதில், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ஸ்மிருதி மந்தனா, ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, ஜின்சன் ஜான்சன், பளுதூக்கும் வீராங்கனை ஹீமா தாஸ் மற்றும் டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா, ஹாக்கி வீரர் மன்பிரீத் சிங் உள்ளிட்ட 20 பேருக்கு அர்ஜுனா விருது வழங்க மத்திய அரசுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
கேல் ரத்னா விருதுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் கோலி மற்றும் வெயிட் லிப்டிங் சாம்பியன் மீராபாய் சானு பெயர்கள் முன்னதாக பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.