நோட்டோவிடம் தோற்றது பாஜக - கலாய்க்கும் நெட்டிசன்கள்

முன்னதாக கடந்த ஏப்ரல் 12-ஆம் நாள் இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்னர், தேர்தல் விதி மீறு வேட்பாளர்கள், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவடா செய்ததால் இந்த தேர்தல் நிறுத்தப்பட்டது.

அதன் பின்னர் வரும் டிசம்பர் 21-ஆம் நாள் மீண்டும் இடைத்தேர்தல் நடைப்பெற்றது. இந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக மதுசூதனனும், திமுக சார்பில் மருதுகணேஷும், சுயேட்சை வேட்பாளராக டிடிவி தினகரனும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. முடிவில், டிடிவி தினகரன் 81,317 வாக்குகள் பெற்று முதல் இடத்தையும், அதிமுக மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தையும், திமுக மருதுகணேஷ் 24,651 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தையும், நாம் தமிழர் கட்சி கலைக்கோட்டுதயம் 3,860 வாக்குகள் பெற்று நான்காம் இடத்தையும் பெற்றன.

பாஜக கரு.நாகராஜன் 1,417 வாக்குகள் பெற்றார். ஆனால், அவரை விட அதிகமாக நோட்டாவுக்கு விழுந்தது குறிப்பிடத்தக்கது. நோட்டாவிற்கு 2373 வாக்குகள் விழுந்தன. இது சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கும், கேலிக்கும் உள்ளாகியுள்ளது.

More News >>