எம்மி விருது விழா 2018 - வெற்றிப் பட்டியல்!
70வது எம்மி விருது விழா லாஸ் ஏஞ்சல்சில் உள்ள் மைக்ரோசாப்ட் திரையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. ஆண்டுதோறும், சிறந்த தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் ஒரிஜினல்ஸ்க்கு இந்த எம்மி விருதுகள் வழங்கப்படுகின்றன.
இதில், ஹெச்.பி.ஓ.,வின் 'கேம் ஆப் திரோன்ஸ்' மற்றும் அமேசானின் 'மார்வெல்ஸ் மிஸ்ட்ரஸ் மெய்சல்' பல விருதுகளை தட்டிச் சென்று முன்னிலை வகித்தன.
விருதுப் பட்டியல்:
சிறந்த டிராமா தொடர்: "கேம் ஆப் த்ரோன்ஸ்" (ஹெச்.பி.ஓ)
சிறந்த டிராமா இயக்குநர்: ஸ்டீபன் டால்ட்ரி "தி க்ரவுன்"
சிறந்த டிராமா கதையாசிரியர்: ஜோயல் ஃபீல்ட்ஸ் & ஜோ வெய்ஸ்பெர்க் "தி அமெரிக்கன்ஸ்"
சிறந்த நகைச்சுவை தொடர்: "தி மார்வெலஸ் மிஸ்ட்ரஸ் மெய்சல்" (அமேசான்)
சிறந்த நகைச்சுவை இயக்குநர்: அமி ஷெர்மன் பலாடினோ, (டிஎம்எம்எம்)
சிறந்த நகைச்சுவை கதையாசிரியர்: அமி ஷெர்மன் பலாடினோ, (டிஎம்எம்எம்)
லிமிடட் தொடர்: "தி அசாசினேஷன் ஆப் ஜியானி வெர்சேஸ்" (எஃப்.எக்ஸ்)
சிறந்த லிமிடட் இயக்குநர்: ரியான் மர்பி, "தி அசாசினேஷன் ஆப் ஜியானி வெர்சேஸ்"
சிறந்த லிமிடட் கதையாசிரியர்: வில்லியம் ப்ரிட்ஜஸ் & சார்லி ப்ரூகர் "பிளாக் மிரர்"
சிறந்த நடிகர் டிராமா தொடர்: மேத்யூ ரைஸ், "தி அமெரிக்கன்ஸ்"
சிறந்த நடிகை டிராமா தொடர்: க்லெய்ரி ஃபோய், "தி க்ரவுன்"
சிறந்த நடிகர் நகைச்சுவை தொடர்: பில் ஹேடர், "பேரி"
சிறந்த நடிகை நகைச்சுவை தொடர்: ரேச்சல் பிராஸ்னன், "தி மார்வெலஸ் மிஸ்ட்ரஸ் மெய்சல்"
சிறந்த நடிகர் லிமிடட் தொடர்: டேரன் கிரைசிஸ், "தி அசாசினேஷன் ஆப் ஜியானி வெர்சேஸ்"
சிறந்த நடிகை லிமிடட் தொடர்: ரெஜினா கிங், "செவன் செகண்ட்ஸ்"
சிறந்த துணை நடிகர் டிராமா தொடர்: பீட்டர் டின்க்லேஜ், "ஜி.ஓ.டி"
சிறந்த துணை நடிகை டிராமா தொடர்: தாண்டி நியூடன், "வெஸ்ட் வோர்ல்ட்"
சிறந்த துணை நடிகர் நகைச்சுவை தொடர்: ஹென்றி வின்க்லர்,"பேரி"
சிறந்த துணை நடிகை நகைச்சுவை தொடர்: அலெக்ஸ் போர்ஸ்டைன், (டி.எம்.எம்.எம்)
சிறந்த துணை நடிகர் லிமிடட் தொடர்: ஜெப் டேனியல்ஸ், "காட்லெஸ்"
சிறந்த துணை நடிகை லிமிடட் தொடர்: மெரிட் வெவர், "காட்லெஸ்"
ரியாலிட்டி-காம்பெடிசன் தொடர்: "ருபல்'ஸ் டிராக் ரேஸ் (விஎச்1)
வெரைட்டி டாக் சீரிஸ்: "லாஸ்ட் வீக் டுனைட் வித் ஜான் ஆலிவர் (ஹெச்.பி.ஓ)
வெரைட்டி ஸ்கெட்ச் தொடர்: "சேட்டர்டே நைட் லைவ்" (என்பிசி)