ரூ.2 கோடி மோசடி புகார்... பிரபல நகைக்கடை அதிபர் கைது

விளம்பர நிறுவனத்திடம் 2 கோடி மோசடி செய்த வழக்கில் சென்னையில் பிரபல நகைக்கடை அதிபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கேராளவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கேரளா பேசன் ஜூவல்லரி கே.ஃஎப்.ஜே. ஆகும்.இதன் கிளைகள் கேரளா,தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ளன. இதன் உரிமையாளர் சுனில் செரியன். நகைக் கடை வியாபாரத்தை விரிவுபடுத்தும் வகையில் ஆங்கிலப் பத்திரிகைகளில் தொடர்ந்து விளம்பரம் கொடுத்து வந்துள்ளனர்.

இந்த விளம்பரங்கள் அனைத்தும் சென்னை நுங்கம்பாக்கதை சேர்ந்த நாகராஜ் என்ற ஏஜென்ட் மூலமாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விளம்பர தொகை கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் அளவிற்கு கே எப் ஜே நிறுவனம் நிலுவையில் வைத்துள்ளது.

நாகராஜ் பலமுறை நகைக்கடை அதிபரை தொடர்பு கொண்டு கேட்ட போது எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து உரிமையாளர் மீது 2 கோடி ரூபாய் மோசடி செய்து ஏமாற்றியதாக விளம்பரம் நிறுவன்ம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தது

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த மத்திய குற்றப்பிரிவு, போலீசார் பணம் மோசடி செய்தது தெரியவந்தது. கேரளா பேசன் ஜூவல்லரியின் உரிமையாளர் சுனில் செரியனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சென்னை எழும்பூரில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More News >>