பிக்பாஸ் இனி சன்டிவியிலுமா? - புதிய புரோமோ
புது புது நிகழ்ச்சிகள் நாள்தோறும் டிவிகளில் அரங்கேறிக் கொண்டு வருகிறது. இதில் அதிகமான மக்களால் கவரப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ் ஒன்றே.
விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் நடத்த போகிறார் என்ற செய்தி வெளிவந்தவுடன் அனைவருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது. ஆனால் இரண்டு சீசன்களை வெற்றிகரமாக நடத்திய கமல்ஹாசன், இந்த நிகழ்ச்சியின் மூலம் பல போற்றுதல்களையும் சில தூற்றுதல்களையும் பெற்று வருகிறார்.
இந்த நிலையில் கமல்ஹாசனை அடுத்து விஷாலும் ஒரு நிகழ்ச்சியை சன் டிவியில் நடத்தவுள்ளார். இதுகுறித்த புரமோ சற்றுமுன் வெளியாகியுள்ளது இந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோவில் 'விதைச்சவன் தூங்கலாம், விதைகள் தூங்காது. அன்பை விதைப்போமா? என்ற வசனத்தை விஷால் பேசுகிறார்.
இந்த புரமோ வீடியோவில் இருந்து இந்த நிகழ்ச்சி பிக்பாஸ் போன்ற ஒரு நிகழ்ச்சியாக இருக்க வாய்ப்பில்லை என தெரிகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்தியில் அமீர்கானும், தெலுங்கில் லட்சுமி மஞ்சுவும் நடத்தும் ஒரு ஆக்கபூர்வமான விவாத நிகழ்ச்சியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அப்படி என்னதான் நிகழ்ச்சியை நடத்தவுள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.பார்ப்போமா?