விஸ்வாசம் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள் லீக்!
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் 4வது முறையாக இணைந்துள்ள விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
வீரம், வேதாளம், விவேகம் என அடுத்தடுத்து மூன்று படங்களில் சிவாவுடன் கூட்டணி வைத்த அஜித், விவேகம் படத்தின் தோல்விக்குப் பிறகும் அவரை நம்பி, அடுத்த படத்தை கொடுத்துள்ளார். இந்த படத்தை மாஸ் கமர்ஷியல் ஹிட்டாக்கும் நோக்கில், சிவாவும் கடுமையாக உழைத்து வருகிறார்.
சமீபத்தில், வெளியான 'இரட்டை தல' ஃபர்ஸ்ட் லுக் அஜித்தின் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சால்ட் & பெப்பர் லுக்கிலே வலம் வந்த அஜித், இந்த படத்தில் ஒரு கெட்டப்பில் ஹேர் டை அடித்து இளமையான தோற்றத்தில் வருவது அவரது ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்பம் படத்திற்கு பிறகு லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா அஜித்துடன் இணைந்துள்ளது படத்திற்கு கூடுதல் பலம்.
இந்நிலையில், இன்று ரசிகர்கள் சிலரால் லீக் செய்யப்பட்ட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இந்திய அளவில் #ViswasamShootingSpot என்ற ஹேஷ்டேக்குடன் டுவிட்டர் டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.
வெளியான புகைப்படங்களில், வெளிநாட்டில் நடக்கும் சட்டத்துக்கு விரோதமான பாக்ஸிங் ரிங்கினுள், அஜித் வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு உள்ளே நுழைகிறார். மாஸ் சண்டைக் காட்சியான இதிலும் அஜித் சால்ட் & பெப்பர் லுக்கிலேயே காட்சியளிக்கிறார்.
தலையின் இளம் லுக்கை எப்போது படக்குழு படமாக்குவர் என்ற கேள்வியும், அது வெறும் சின்ன போர்ஷனோ என்ற சந்தேகமும் இப்பவே ரசிகர்கள் நெஞ்சில் எழுந்துள்ளன.
எதுவாக இருந்தாலும் அடுத்தாண்டு வரும் தைப் பொங்கல் அஜித்தின் விஸ்வாசத்துடன் 'தல' பொங்கலாகவே வரும் என்பதில் சந்தேகமே இல்லை!