தானோஸை நொறுக்கப்போகும் கேப்டன் மார்வெல் டிரெய்லர் ரிலீஸ்!

பிரை லார்சன் நடிப்பில் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள கேப்டன் மார்வெல் படத்தின் டிரெய்லர் தற்போது ரிலீசாகியுள்ளது.

அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் படத்தில் நமக்கு பிடித்த சூப்பர் ஹீரோக்களுடன் சேர்த்து பாதி உலகையே காலி செய்த தானோஸை அழிக்கும் சூப்பர் சக்தியான கேப்டன் மார்வெல் படத்தின் டிரெய்லர் தற்போது ரிலீசாகியுள்ளது.

மார்வெல் ஸ்டுடியோஸின் பெயரைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ள இந்த கேப்டன் மார்வெலுக்கு மற்ற ஹீரோக்களை விட அதீத சக்திகள் உள்ளன.

அயர்ன்மேன், ஹல்க், கேப்டன் அமெரிக்கா, தோரை விட கேப்டன் மார்வெலுக்கு அதிக சக்திகள் இருந்தாலும், தானோஸை யார் அழிப்பார் என்ற சஸ்பென்ஸை மார்வெல் இன்னமும் காப்பாற்றியே வருகிறது.

அவெஞ்சர்ஸ் 4 திரைப்படம் அவெஞ்சர்ஸ்: தி எண்டர்ஸ் கேம் என்ற தலைப்பில் வெளியாகவுள்ளது என வாய் தவறி அதன் கேமரா மேன் நேரலை நிகழ்ச்சி ஒன்றில் பேட்டியளித்தது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு சூப்பர் ஹீரோக்களின் அறிமுக கதை மற்றும் அவர்களை இணைக்கும் அவெஞ்சர்ஸ் என இதுவரை மார்வெல் 17 படங்களை எடுத்துள்ளது. அந்த வரிசையில், மார்வெலின் மிக முக்கியமான கேப்டன் மார்வெல் அடுத்த ஆண்டு மார்ச் 8ம் தேதி திரைக்கு வருகிறது.

சாதாரண போர் விமான பைலட்டாக வாழ்க்கையை தொடங்கும் பிரை லார்சன், விண்வெளியில் வேற்று கிரக வாசியான மார்வெலை சந்தித்து, அவரது சக்திகளை பெற்று கேப்டன் மார்வெலாக மாறுவதே திரைக்கதையாக உருவாகியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேப்டன் மார்வெலின் டிரெய்லர் இதோ:

 

More News >>