அணு சக்தி கழகத்தின் புதிய தலைவர் நியமனம்
அணுசக்தி கழகத்தின் தலைவர், அந்த துறையின் செயலாளராக கமலேஷ் நில்காந்த் வியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அணு சக்தி கழகத்தின் தலைவராகவும், அணு சக்தி துறையின் செயலாளராகவும் பதவி வகித்து வந்த டாக்டர் சேகர் பாசுவின் பதவிக்காலம் இன்றுடன் முடிகிறது.
இதையடுத்து, பணிமூப்பின்படி, இவருக்கு அடுத்த நிலையில், பாபா அணு ஆராய்ச்சி நிலைய இயக்குனராக இருந்து வரும் கமலேஷ் நில்காந்த் வியாஸ், அணு சக்தி கழகத்தின் புதிய தலைவராகவும், அணு சக்தி துறையின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதையடுத்து, கமலேஷ், புதிய பதவியை இன்று ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள அணுமின் நிலையங்கள் மற்றும் அதை சார்ந்த நிறுவனங்கள் அனைத்தும், அணு சக்தி கழகத்தின் தலைவரின் கீழ் செயல்படும் என்பதும், புதிய தலைவர், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கமலேஷ், 2021 மே 3ஆம் தேதி வரை பதவியில் தொடர்வார்.