இரு அணிகள் மோதுவதை ரசிக்கும் - இம்ரான் கான்
இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேரில் பார்க்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டனாக இருந்த இம்ரான்கான் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று அந்நாட்டு பிரதமராக பதவி ஏற்றார்.
தற்போது சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் அவர் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருகிறார். துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான A பிரிவு லீக்கட்டம் நடைபெற உள்ளது.
மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை இம்ரான்கான் நேரில் கண்டுகளிக்க இருப்பதாக துபாயில் உள்ள பாகிஸ்தான் ஆட்ட தூதரக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.