பெண்களைத் தாக்கும் கர்ப்பப்பை நோய் - ஒரு அதிர்ச்சி ரிபோர்ட்
பெண்கள்… பெண்கள் என்று சொல்லும் போது நினைவில் உதிப்பவை தாய்மை. தாய்மை என்பது ஒரு பெண் கர்ப்பம் தரித்து பத்து மாதம் கழித்து ஒரு சிசுவை ஈன்றெடுப்பதாகும்.
இக்காலத்தில் பெரும்பாலான பெண்கள் கர்ப்பப்பை நோயினால் அவதியுருகின்றனர். கர்ப்பபை நோய்களான மாதவிடாய் பிரச்சனைகள், கர்ப்பப்பை புற்றுநோய், கர்ப்பப்பை கட்டிகள். இந்த நோய்களின் மூலம் பெண்களில் பத்தில் ஒரு பங்கு பேர் தன் கர்ப்பப்பையை இழக்கும் நிலைக்கு ஆளாகின்றனர்.
இம்மாதிரியான கர்ப்பப்பை நோய்களை ஆரம்ப கால கட்டத்திலேயே அறிந்து அதற்கான சரியான சிகிச்சையை எடுக்கும் போது மருந்து மாத்திரைகளின் முலம் சரி செய்யப்படுகிறது. இதுவே காலம் கடந்து போகும் போது தான் பெண்கள் கர்ப்பப்பையை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இப்படி கர்ப்பப்பையை இழக்கும் நிலையிலுள்ள பெண்கள் மனதளவில் பல கேள்விகளுக்கு ஆளாகின்றனர்...
கர்ப்பப்பையை அகற்றும் போது பல உடல் ரீதியான பிரச்சனைகள் ஏற்ப்படுகிறது,
தொற்று நோய்கள் பரவுதல். அதிக இரத்தப்போக்கு. கர்ப்பப்பையை சுற்றி உள்ள திசுக்கள் பாதிக்கப்படுதல். ஹார்மோன் மாற்றம்.இதனால் அவர்களால் எதிலும் கவனம் செலுத்தாமல் வாழ்க்கையை தொலைத்துவிடுகின்றனர்.
இதுபோன்ற மன உலைச்சலுக்காளான பெண்களின் கவனத்திற்க்கு, Hysterectomy என்பது பெண்களின் கர்ப்பப்பையை நீக்கும் முறையாகும். இந்த அறுவை சிகிச்சையின் மூலம் கர்ப்பப்பை முழுமையாக நீக்கப்பட்டு அதோடு பெலோபியன் குழாயும் சேர்த்து நீக்கப்படுவதால் பெண்கள் குழந்தையை பெறும் வாய்ப்பை இழக்கின்றனர்.
Hysterectomy ஆய்வறிக்கயின்படி, 10 லிருந்து 40 சதவிகித பெண்கள், கர்ப்பப்பையை அகற்றிய பிறகும் கிழே குறிப்பிட்ட பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்கள் என தெரிவிக்கிறது.
அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்களால் முன்பு போல் உடலுறவில் ஈடுபட முடியாது எனவும், அறுவை சிகிச்சையின் போது கர்பப்பையோடு இணைந்துள்ள சிறுநீரக நரம்புகள் பாதிக்கப்படுவதால் பெண்கள் உடலுறவில் ஈடுபடும் போதும் , அழுத்தமாக இரும்பும் போதும் சிறுநீர் வெளியேற்றப்படுகிறது.
அதேசமயம் இப்பிரச்சனைக்கு தீர்வாக kegel excercises செய்யப்படுகிறது. இதன் முலம் அனைத்து பிரச்சனையும் தீர்க்கப்படுகிறது. தீமையிலும் நன்மை உள்ளதுபோல, கர்ப்பப்பையை அகற்றுவதுக்கு முன்பு இருந்த அதிக இரத்தப்போக்குடன் கூடிய வலியும், கர்ப்பப்பையை அகற்றிய பிறகு குணமடைய செய்கிறது.
கர்ப்பப்பையை அகற்றுவதன் முலம், புற்றுநோய்க்கான திசுக்கள் மற்ற உறுப்புகளில் பரவாமல் தடுக்கப்படுகிறது.