சிறுவன் தினேஷின் மருத்துவ செலவுகளை ஏற்கும் சூர்யா !
தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் தினேஷ் குமாரின் மருத்துவ செலவுகளை ஏற்பதாக நடிகர் சூர்யா உறுதியளித்துள்ளார்.
தன்னை நேரில் பார்க்க வேண்டுமென்று விரும்பிய சிறுவன் தினேஷ்குமாரின் ஆசையை நடிகர் சூர்யா நிறைவேற்றினார். தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தினேஷ்குமாரை தன்னுடைய இல்லத்திற்கு அழைத்த சூர்யா, ஏராளமான பரிசு பொருள்களை அளித்ததுடன் சிறுவனின் மருத்துவ செலவு அனைத்தையும் ஏற்று கொள்வதாக பெற்றோர்களிடம் உறுதியளித்துள்ளார்.
சிறுவன் தினேஷ்குமாருடன், நடிகர் சிவக்குமார் மற்றும் நடிகர் கார்த்தி ஆகியோர், செல்ஃபி எடுத்து அவனை மகிழ்வித்தனர். மேலும், நடிகர் சிவக்குமார் வரைந்த ஓவியம் ஒன்றையும் சிறுவன் தினேஷ்குமாருக்கு பரிசாக வழங்கினர்.
இதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் சூர்யாவின் ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.