மணப்பெண்ணுக்கான அசத்தலான சிகையலங்காரம்!
மணப்பெண்ணின் அழகுக்கு மெருகூட்டுவது சிகையலங்காரம். முன்புறம் முகத்தின் மேற்புறம் சிகையலங்காரம் செய்வதற்கு ‘ப்ரண்ட் செட்’ என்று பெயர்.இதற்கு பொருந்தும் அளவில் தான் பின்புறம் தலையை அலங்கரிக்க வேண்டும்.
பின்னல் போட்டு ஜடையை அலங்காரம் செய்து, பின்னலில் பூ வைப்பதற்கு பதிலாக ஜரிகை, முத்து, கற்களால் செய்யப்பட்ட மோடி பைப்கள், பைப் பின்னல், ஐந்துகால் பின்னல், கொண்டைக்கு கீழே பின்னல் போடுவது என்று பல வகைகள் உள்ளன.
கொண்டை போடும்போது மணப்பெண்ணின் உயரம், பருமன், கழுத்தின் உயரம் போன்றவற்றைக் கணக்கிட வேண்டும்.
குட்டையான பெண்களுக்கு சற்று தூக்கியவாறு கொண்டையும், நீளமான கழுத்துள்ளவர்களுக்கு கழுத்தை மறைக்கும் அளவில், கொண்டையை கொஞ்சம் இறக்கியும் போட வேண்டும்.
முகம் நீளமாக உள்ளவர்களுக்கு காதுகளை மறைக்கும் விதத்தில் சிறிது முடியைத் தூக்கிக் கட்ட வேண்டும். நடுவகடு எடுத்து அதில் நெற்றிச் சுட்டியை அணியலாம் அல்லது காதின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு முடியை வாரி எடுத்துச் சென்று பின்குத்தி, பின்னால் அழகாக கொண்டையைப் போடலாம்.
இதுப்போன்ற சிகையலங்காரம் செய்யும் போது மணப்பெண் தேவயதையாக காட்சியளிப்பாள். சரியான சிகையலங்காரத்தை தேர்வு செய்து உங்களுடைய ஸ்பெஷலான நாளை மேலும் ஸ்பெஷல் ஆன நாளாக மாற்றுங்கள்.