நடுவானில் காதல் - பறிபோனது வேலை

பறந்து கொண்டிருந்த விமானத்தில் ஆண் நண்பர் முன்மொழிந்த காதலை ஏற்றுக்கொண்ட விமான பணிப்பெண், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சீன கிழக்கு பிராந்திய விமான சேவை பிரிவில் பெண் ஒருவர் விமான பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தார். கடந்த மே மாதம் அவர் விமானம் ஒன்றில் பணியிலிருந்தார். அதே விமானத்தில் அவரது ஆண் நண்பரும் பயணித்தார். விமானம் புறப்பட்டு அரை மணி நேரம் கழித்து, நடு வானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது அப்பணிப்பெண்ணின் நண்பர் எழுந்து வந்து, அப்பெண்ணின் முன்பு முழங்கால்படியிட்டு, தம் காதலை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினார். தம் நண்பரின் காதலை ஏற்றுக்கொள்வதாக அந்த நங்கை தெரிவித்தார்.

இந்தக் காட்சியின் வீடியோ பதிவு சமூக ஊடங்களில் பரவியது. இதைத் தொடர்ந்து இம்மாதம் 10ம் தேதி, அந்த பணிப்பெண்ணை வேலையை விட்டு நீக்கி விமான நிறுவனம் கடிதம் கொடுத்துள்ளது. தனிப்பட்ட விஷயத்திற்காக பயணியர் பாதுகாப்பில் கவன குறைவாக இருந்த காரணத்தினால் அவரை பணியிலிருந்து விலக்குவதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்பெண்ணுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.காதல் வென்றது; வேலை போனது!

More News >>