நாங்கள் வேலை இல்லாதவர்கள்... ! ஆஸ்திரேலிய துணைக் கேப்டன் வார்னர்
ஆஸ்திரேலிய கிரக்கெட் வாரியத்துக்கும் வீரர்களுக்குமிடையே சம்பள விவகாரத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 200 பேர் வேலை இல்லாமல் இருக்கின்றனர். இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் துணைக் கேப்டன் டேவிட வார்னர் இன்ஸ்டாகிராமில் பதிவு வெளியிட்டுள்ளர், அதில், ''நான் இப்போது வேலை இல்லாதவன், எனது அற்புதமான மனைவியால்தான் குடும்பம் ஓடிக் கொண்டிருக்கிறது '' எனத் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கும் கிரிக்கெட் சங்கத்துக்குமிடையே டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் சம்பள விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு முடிவு எட்டப்படாமல் இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி அடுத்து வங்கதேசம், தென்ஆப்ரிக்கா, இந்தியா அணிகளுக்கு எதிரான விளையாடுகிறது. நவம்பரில் ஆஷஸ் தொடர் தொடங்கவுள்ளது. சம்பள விவகாரம் முடிவு எட்டப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.