தமிழக துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை...

தமிழகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வடமேற்கு வங்க கடலில், கலிங்கப்பட்டணத்திலிருந்து, சுமார் 550 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகை, கடலூர், காரைக்கால், ராமதநாதபுரம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் இன்று காலை புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழக வானிலையில் நேரடியான பாதிப்பு இருக்காது எனவும், கடல் சற்று சீற்றமாக காணப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெலுங்கானா, ஒடிசா மேற்குவங்கம் கடலோர பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை இருக்கலாம் எனவும் எதிர் பார்க்கப்படுகிறது.

புயல் சின்னம் காரணமாக தமிழக கடல் பரப்பில் கடற் காற்று வேகமாக வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் இதன்மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

More News >>