அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவமனையில் அனுமதி...
தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.வி. சண்முகம் தமிழக அமைச்சரையில் சட்டத்துறை அமைச்சராக உள்ளார். 45 வயதான அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அமைச்சர் சண்முகம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சிகிச்சை முடிந்து எப்போது அவர் வீடு திரும்புவார் என்பது குறித்து மருத்துவமனை நிர்வாகம் எந்த தகவலையும் வெளியிடவில்லை.