நடிகை நிலானி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி..?
நடிகை நிலானி, காந்தி லலித் தன்னை திருமணம் செய்துக்கொள்ள முயற்சி செய்கிறார் என்று நான்கு தினங்களுக்கு முன் சென்னை கமிஷ்னர் அலுவலகம் சென்று புகார் தெரிவித்திருந்தார். இதனால், மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான காந்தி உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் மரணம் அடைத்தார்.
இதனையடுத்து மரணம் அடைந்த லலித் காந்தியின் சகோதரர், தன்னுடைய தம்பியின் மரணத்திற்கு முழு காரணம் நிலானி தான், தன்னுடைய தம்பியின் மீது நிலானி தவறான புகார் கொடுத்ததால், காந்தி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். அவரின் தற்கொலைக்கு முக்கிய காரணம் நிலானி மட்டுமே. தன்னுடைய தம்பியை நம்ப வைத்து ஏமாத்திவிட்டார். தற்போது வரை உண்மை நிலவரம் என்ன என யாருக்கும் தெரியவில்லை. இப்போது தான் நாங்கள் உண்மையை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறோம். மேலும், நிலானிக்கு குடி பழக்கம் உள்ளது. நிறைய ஆண்களுடன் தொடர்பும் உள்ளது விரைவில் இது குறித்து ஆதாரத்தை வெளியிடுவேன் என கூறியுள்ளார்.
இதனையடுத்து சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த நிலானி, காந்தி லலித்குமார் தற்கொலைக்கு நான் காரணமல்ல என கூறியுள்ளார் நிலானி. காந்தியை திருமணம் செய்ய முடிவு செய்திருந்தேன் ஆனால் காந்தி குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி என்னிடம் இருந்து அதிக பணம் வாங்கிகொண்டு செலவு செய்ததால் அவரை விட்டு ஒதுங்கினேன். மேலும் நானும் காந்தியும் சேர்ந்திருப்பது போன்ற படங்களை வேண்டுமென்றே சமூகவலைதளங்களில் பரப்புகின்றனர். போட்டோக்களை வெளியிட்டு அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை நிலானி தனது மனுவில் கோரிக்கை விடுத்தார்.
லலித் காந்தியின் சகோதரர் ரகுகுமார் கூறியதை அடுத்து நிலானி மீதான குற்றச்சாட்டு அம்பலமானதால், வளசரவாக்கம் வீட்டில், கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சித்துள்ளார். மருந்தை குடித்ததும் மயக்கமான நிலையில், தனது இரண்டு குழந்தைகளும் கதறி அழுத சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் நடிகை நிலாணியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். காதலன் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள நிலையில், நிலானி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.