சுசீந்திரனின் ஜீனியஸ் டீஸர் ரிலீஸ் !
சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜீனியஸ்’ படத்தின் டீஸர் வெளியாகி வைரலாகியுள்ளது.
படிப்பு படிப்பு என்று பசங்கள டார்ச்சர் செய்யும் பெற்றோர்களுக்கான பாடமாக இந்த படம் விளங்கும் என அதன் டீஸரை பார்க்கும் போதே தெரிகிறது.
இப்படத்தில் ரோஷன் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவரது தந்தையாக ஆடுகளம் நரேன், ஒட்டுமொத்த மூர்க்கத்தனமான பெற்றோர்களின் பிரதிநிதியாக காட்சியளிக்கிறார்.
இன்றைய சூழ்நிலையில் குழந்தைகளுக்கு கல்வியை மட்டுமே திணிப்பதால், அவர்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள், எவ்வளவு மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் போன்றவற்றை இப்படம் பாடம் நடத்தவுள்ளது.
அவ்வாறு மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்ட ஒருவனின் வாழ்க்கை எவ்வாறெல்லாம் மாறுகிறது என்பதை சுற்றி கதை அமைத்துள்ளார் சுசீந்திரன். இப்படத்திற்கு, கூடுதல் பலம் சேர்க்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
பெரிய ஹீரோக்களிடம் இக்கதையை சுசீந்திரன் கூறியும், அவர்கள் இதனை லைக் செய்யவில்லை என சமீபத்தில், தனது மனக்குறையை தெரிவித்திருந்தார் இயக்குநர் சுசீந்திரன்.
இக்கதை கேட்டு பிடித்து போன தயாரிப்பாளர் ரோஷன், தானே தயாரித்து இதில் நடிப்பதாகவும் தெரிவித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.