தேசிய அளவில் தமிழக காவல்துறை தனித்துவம் -nbsp முதலமைச்சர்
தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு சர்வதேச மற்றும் தேசிய அளவில் தனித்துவம் பெற்று விளங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இன்று சென்னையில் காவலர் நிறைவாழ்வு பயிற்சியை தொடங்கி வைத்து அவர் பேசினார். காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சில நேரங்களில் மன அழுத்தத்திற்கு உள்ளாவதை கருத்தில் கொண்டு இந்த பயிற்சி வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
காவல்துறையினரின் பணிச் சுமையை குறைப்பதற்காக மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும் முதலமைச்சர் பட்டியலிட்டார்.
பெங்களூரில் செயல்பட்டு வரும் உலகத்தரம் வாய்ந்த தேசிய மனநல மற்றும் அறிவியல் நிறுவனத்துடன் இணைந்து காவல்துறையினருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இந்த பயிற்சி வழங்கப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்தார்.