அமெரிக்காவில் மீண்டும் பயங்கர துப்பாக்கிச்சூடு
அமெரிக்காவில் மேரிலேண்ட்(Maryland) மாகாணத்தின் ஹாபோர்ட் கவுண்டியில்(Harford County) வியாழக்கிழமை காலை 11.45 மணியளவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது .இச்சம்பவத்தில் இதுவரை மூன்று பேர் பலியானதாகவும் மேலும் பலர் இறந்திருக்கக்கூடும் என்று முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மேரிலேண்ட் மாகாணத்தின் ஹாபோர்ட் கவுண்டியில் RiteAid மருதுவக்கிடங்கு உள்ளது.இங்கு பணியாற்றிவந்த பெண் ஒருவர் கைத்துப்பாக்கியை பயன்படுத்தி உடன் ஊழியர்களை சுட்டதோடு மட்டுமல்லாமல் தன்னைத்தானே இருமுறை சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டள்ளார் .
மேலும் துப்பாக்கிசூடு நடந்த இடத்திற்கு அருகில் சர்ச் கிரீக் ஆரம்பப்பள்ளி அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு நாட்களில் விஸ்கான்சின்,பென்சிவலனியா மாகாணங்களில் அடுத்துதடுத்து நடந்த துப்பாக்கிசூட்டின் பீதி மறைவதுற்குள் இன்று நடந்த மூன்றாவது சம்பவம் மக்களை குறிப்பாக இந்தியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கியிருக்கிறது.