இந்தியன் வங்கி உள்பட பத்து வங்கிகளுக்கு தலைமை செயல் அதிகாரிகள் நியமனம்
மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார சேவைகள் துறையின் முன்மொழிதலின் அடிப்படையில் மத்திய அமைச்சரவையின் நியமன குழு, பத்து பொது துறை வங்கிகளுக்கு மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பதவிக்கு அலுவலர்களை நியமித்துள்ளது.
பெயர் வகித்த பதவி புதிய பதவி1. பத்மஜா சுந்துரு - துணை மேலாண் இயக்குநர், பாரத ஸ்டேட் வங்கி - மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி, இந்தியன் வங்கி
2. மிருயுஞ்ஜய் மஹாபத்ரா - துணை மேலாண் இயக்குநர், பாரத ஸ்டேட் வங்கி - மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி, சிண்டிகேட் வங்கி
3. பல்லவ் மோஹாபத்ரா - துணை மேலாண் இயக்குநர், பாரத ஸ்டேட் வங்கி - மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா
4. ஜே. பக்கிரிசாமி - துணை மேலாண் இயக்குநர், பாரத ஸ்டேட் வங்கி - மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி, ஆந்திரா வங்கி
5. கர்ணம் சேகர் - துணை மேலாண் இயக்குநர், பாரத ஸ்டேட் வங்கி - மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி, தேனா வங்கி
6. எஸ்.எஸ். மல்லிகர்ஜூனா ராவ் - செயல் இயக்குநர், சிண்டிகேட் வங்கி - மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி, அலஹாபாத் வங்கி
7. ஏ. எஸ். ராஜீவ் - செயல் இயக்குநர், இந்தியன் வங்கி - மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி, மஹாராஷ்டிரா வங்கி
8. அதுல்குமார் கோயல் - செயல் இயக்குநர், யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா - மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி, யூகோ வங்கி
9. எஸ். ஹரிசங்கர் - செயல் இயக்குநர், அலஹாபாத் வங்கி - - மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி, பஞ்சாப் & சிந்து வங்கி
10. அசோக் குமார் பிரதான் - செயல் இயக்குநர், யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா - - மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி, யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா
இந்த நியமனங்களை மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை அறிவித்துள்ளது.