சர்கார் ஆடியோ வெளியீட்டு விழாவை நேரில் காணவேண்டுமா ?

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் சர்கார் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை நேரில் காண தளபதி ரசிகர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

வரும் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாடகங்களை தொடர்ந்து பாருங்கள். அதில் ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் ஒரு கேள்வி கேட்கப்படும். அதற்கு விரைவாக அதிக கேள்விக்கு பதிலளிக்க வேண்டும். ஒருவர் எத்தனை கேள்விக்கு வேண்டுமானாலும் பதிலளிக்கலாம். இதில் 250 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு வீடு தேடு இசை வெளியீட்டு விழா அழைப்பிதழ் வரும். அவருக்கு விழாவுக்கு வந்து செல்ல விமான டிக்கெட், வழி செலவுக்கு ரூ. 2000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலஷ்மி மற்றும் பலர் நடித்து வரும் சர்க்கார் படத்திற்கு இசையமைத்துள்ளார் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், மெர்சல் படத்தை தொடர்ந்து, அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் இந்த படத்திற்கும் எழுதியுள்ளார். மெர்சலில் விஜய் குரலில் பாடல் இடம்பெறவில்லையே என ஏங்கிய ரசிகர்களுக்கு, இந்த படத்தில் விஜய் ஒரு பாடல் பாடியுள்ளதாக சர்ப்ரைஸ் தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் மனங்களை நிச்சயம் சர்கார் பாடல்கள் ஆட்சி செய்யும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சன் டிவி தொடர்களை இனி விஜய் ரசிகர்கள் வெறி கொண்டு பார்ப்பார்கள் என்பதில் சந்தேகமே தேவையில்லை!

More News >>