சென்னையில் பிரபல ஹோட்டலில் தீ விபத்து..!
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர். சமையலரையை சுத்தம் செய்யும் பணியின் போது ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த முருகன், வெங்கடேசன் உள்பட 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் அறிந்து விரைந்து சென்ற தீ அணைப்பு படைவீரர்கள் தீ மேலும் பரவமல் அணைந்துவிட்டனர் இதனால் பெரும் அசம்பாவிதம் ஏற்ப்படாமல் தடுக்கப்பட்டது.
சென்னையில் அமைந்துள்ள ஹில்டன் ஒரு ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஹோட்டல் ஆகும். இந்த நிறுவனம் 28 பிப்ரவரி 2011ல் தொடங்கப்பட்டது. ஹில்டன் நிறுவனம் கோன்ராட் ஹில்டன் மே 31, 1919ல்நிறுவப்பட்டது.
தற்போது ஆறு கண்டங்களில் உள்ள 85 நாடுகளில் உள்ள 570 க்கும் அதிகமான ஹில்டன் ஹோட்டல் & குடியிருப்புகள் உள்ளன.
நிறுவனம் தொடங்கி 99 ஆண்டுகள் ஆன நிலையில் சென்னையில் ஏற்ப்பட்ட தீ விபத்து பெரும் அசம்பாவிதமாக மாறமல் தடுக்கப்பட்டதால் நிறுவனதின் பெயர் மற்றும் வாடிக்கையாளரின் நலனும் காக்கப்பட்டது.