நெல்லையில் மா்ம நோயின் தாக்கம் ரத்தம் கக்கி உயிரிழக்கும் அபாயம்.?
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் கீழப்பம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஆடுகள் கடந்த சில தினங்களாக மா்ம நோய் தாக்கி சுமாா் 80 ஆடுகள் ரத்தம் கக்கிய நிலையில் உயிாிழந்துள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.
கீழப்பம் பகுதியைச் சோ்ந்த சண்முகம் என்பவா் ஆடு, மாடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறாா். கடந்த சில தினங்களாக இவரது ஆடுகளும் நோய் பாதிப்பு ஏற்பட்டு உயிாிழந்து வந்தன. இந்நிலையில் அவற்றிற்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கீழப்பம், களக்காடு, மஞ்சங்குளம் உள்ளிட்ட 10 கிராமங்களில் கால்நடைத்துறை மருத்துவா்கள் நோய் தாக்குதல் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். ஆடுகள் இறப்பிற்கு ஆந்த்ராக்ஸ் நோய் தாக்குதல் காரணமாக இருக்கலாம் என்று மருத்துவா்கள் சந்தேகம் தொிவித்துள்ளனா்.
இருப்பினும் ஆடுகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவடைந்து ரத்த மாதிரிகளின் முடிவு வெளியான பின்னரே ஆடுகளின் இறப்பிற்கான உண்மையான காரணத்தை தொிவிக்க முடியும் என்று தொிவித்துள்ளனா். ஆடுகள் கொத்து கொத்தாக உயிாிழந்து வருவதால் அப்பகுதி விவசாயிகள் கடும் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.