விமானத்தில் காற்றழுத்தம்: ரூ.30 லட்சம் நஷ்டஈடு கேட்கும் விமான பயணி
விமானத்தில் ஏற்பட்ட காற்றழுத்தத்தால் கடும் பாதிப்படைந்த விமான பயணி ஒருவர் ரூ.30 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வலியுறுத்தி உள்ளார்.
மும்பையில் இருந்து ஜெய்ப்பூருக்கு நேற்று காலை ஜெட் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டது. விமானம் பறக்கத் தொடங்கிய சில மணி நேரத்தில், பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
அப்போது, இதுகுறித்து பயணிகள் புகார் தெரிவித்ததில், காற்றழுத்தை சீராக வைக்க உதவும் இரண்டு பொத்தான்களை இயக்க பைட்டுகள் மறந்தது தெரியவந்தது.இதனால், விமானத்திற்குள் பரபரப்பு ஏற்பட்டது. அதற்குள், பயணிகளுக்கு காது, மூக்கில் இருந்து ரத்தம் வரத் தொடங்கியது. பலருக்கு தலைவலி, ரத்த கசிவு ஏற்பட்டது. இதனால், மேலும் பரபரப்பு ஏற்பட்டது.
இதன்பிறகு, விமானத்தை உடனடியாக, மீண்டும் மும்பைக்கு தரையிறக்கப்பட்டது. பின்னர், பாதிக்கப்பட்ட பயணிகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர், நேற்று மாலை டிஸ்சார்ஸ் செய்யப்பட்டார்கள்.
இந்நிலையில், காது, மூக்கில் இருந்து அதிக ரத்த இழப்பு ஏற்பட்டதால், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுளேன் என்றும் இதற்காக, ரூ.30 லட்சம் ஜெட் ஏர்வேஸ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.