ஆச்சரியத்தில் ரசிகர்கள் விவசாயியாகவே மாறிய விஜய் சேதுபதி!

 

விஜய் சேதுபதியின் நடிப்பை பார்த்து வியக்காதவர்கள் இல்லை என்ற நிலை வந்துவிட்டது என்ன கதாபாத்திரமாக இருந்தாலும் ஒப்புக்கொண்டு நடிப்பதில் விஜய் சேதுபதிக்கு ஈடு இணை இல்லை இதனால் குறுகிய காலத்தில் சிறந்த நடிகர் என்று திரையுலகினரையும் ரசிகர்களையும் பேச வைத்து இருக்கிறார். 

பீட்சா, நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், ரவுடி கதாபாத்திரம் ஏற்ற சூதுகவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரவுடிதான் ஆகிய படங்கள் அவருக்கு வரவேற்பை பெற்றுக் கொடுத்தன மேலும் அவர் தேர்வு செய்யும் கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மனதில் எளிதில் ஒட்டிக்கொள்கிறது

தர்மதுரையில் டாக்டராகவும் சேதுபதியில் போலீஸ் அதிகாரியாகவும் வந்தார். இப்போது சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், 96, செக்க சிவந்த வானம், ரஜினியுடன் பேட்ட, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. 

சீதக்காதி படத்தில் பல தோற்றங்களிலும் நடிக்கிறார் அதில் வயதான விவசாயியாக வரும் விஜய் சேதுபதியின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.வருகிறார். இந்த படத்தை பாலாஜி தரணிதரன் டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. 

 

More News >>