புரட்டாசி மாத வெயிலுக்கு சாப்பிட வேண்டிய உணவு?
புரட்டாசி வெயிலில் பிரண்டை கூட காயும் என்பது பழமொழி அந்த வெயில் இருந்து நம்மை பாதுகாத்துகொள்ள சாப்பிடவேண்டிய உணவுகளில் ஒன்று நெல்லிக்காய் சாதம். நெல்லிக்காய் என்றலே குளிர்ச்சிதான் எனவே இங்கு எளிய முறையில் நெல்லிக்காய் சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
சமைக்க தேவையான பொருள்கள்:
சாதம் - 1 கப் வர மிளகாய் – 6 கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 3 சிட்டிகை கறிவேப்பிலை - 3 கொத்து நெய் - 2 தேக்கரண்டி கடுகு - 1/4 தேக்கரண்டி பெரிய நெல்லிக்காய் – 7 பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி நல்லெண்ணெய் - 2 மேஜைக்கரண்டிஉணவு செய்முறை :
முதலில் நெல்லிக்காயை பொடியாகத் துருவி, கொட்டையை எடுத்து விடவும். பின்பு வேக வைத்த சாதத்தை ஒரு தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு சிவந்ததும், கறிவேப்பிலை, வர மிளகாய், பெருங்காயம், மஞ்சள் தூள் போட்டு தாளிக்கவும். அதனுடன் துருவிய நெல்லிக்காயைப் போட்டு நன்கு கிளறி, சிறிது வதக்கியதும், அடுப்பில் இருந்து இறக்கிய நெல்லிக்காய் கலவையுடன் ஆற வைத்த சாதம் சேர்த்து, சாதம் குலையாமல் நன்கு கிளறவும் . சுவையான நெல்லிக்காய் சாதம் ரெடி.