விஸ்வாசம் படத்தில் தூக்குத் தண்டனை கைதியா அஜித் ?
இயக்குநர் சிவா மற்றும் நடிகர் அஜித் காம்போவில் 4வது படமாக உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ படத்தில் பெப்பர் அண்ட் சால்ட் லுக்கில் கம்பீரமாக தோன்றவுள்ள அஜித்தின் கேரக்டர் பெயர் லீக்காகியுள்ளது.
‘தூக்குத் துரை’ என்ற கதாபாத்திரத்தில், நடிகர் அஜித் வெளி நாட்டு சிறையில் இருப்பது, போன்றும், ஒரு கட்டத்தில் வெளிவந்து எதிரிகளை துவம்சம் செய்வதாகவும் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாக, கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிப்பட்டுள்ளன.
அப்படியென்றால், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ’இரட்டை தல’யை காட்டினார்களே என்றால், அதுதான் படத்தின் ஹைலைட் மற்றும் சர்ப்ரைஸ் பகுதியாக இருக்கவுள்ளது.
ஒருவேளை அஜித், தனது நண்பன் அல்லது தனது முதலாளியிடம் உள்ள விஸ்வாசத்திற்காக, தூக்குத் தண்டனை கைதியாக இருக்கலாம் என்றும். பிளேஷ்பேக்கில், இளம் வயது அஜித் காட்டப்படலாம் என்றும் கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன.
எப்படி இருந்தாலும், அஜித், நயன்தாரா காம்போ வரும் பொங்கலுக்கு பொங்கி எழும் என்பதில் சந்தேகமே இல்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் படத்தின் டீஸருக்காக ’தல’ அஜித்தின் ரசிகர்கள் போல், நாமும் காத்திருப்போம்!