தானே புயல் பாதிப்பு... இழப்பீடு கோரும் மீனவ பெண்

தானே புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த வனகிரியைச் சேர்ந்த நாகவள்ளி தாக்கல் செய்த மனுவில், 2011ஆம் ஆண்டு கடலில் மீன்பிடிக்கச் சென்ற தன் மகன் இளைய பரதன், தானே புயலில் சிக்கி மாயமானதாகவும், மாவட்ட ஆட்சியர் நடத்திய விசாரணைக்கு பின், இளையபரதன் இறந்து விட்டதாக சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும், உரிய இழப்பீடு ஏதும் வழங்கவில்லை எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இழப்பீடு வழங்க கோரி மீன் வள துறை இயக்குனர், உதவி இயக்குனர், ஆணையருக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், இழப்பீடு கோரி மீனவரின் தாய் அளித்த விண்ணப்பத்தை 12 வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

More News >>