நிக்கி கல்ராணி பங்கேற்ற நிகழ்ச்சியில் போலீஸ் தடியடி!
திருப்பூரில் செல்போன் கடை திறப்பு விழாவுக்கு சென்ற நடிகை நிக்கி கல்ராணியை காண ரசிகர்கள் முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை ஒழுங்கு படுத்தினர்.
திருப்பூரில் சுப்ரீம் செல்போன் கடையின் 30வது கிளையை திறக்க நடிகை நிக்கி கல்ராணி சென்றார். அப்போது அவரை காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டிய காவல்துறையினர் நடிகையுடன் செல்பி எடுப்பதில் ஆர்வம் காட்டினர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் சுதாரித்த காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.
பின்னர் பாதுகாப்புடன் கடைக்குள் சென்ற நிக்கி கல்ராணி, குத்துவிளக்கேற்றி கடையை திறந்து வைத்தார். கடை திறப்பு விழா சலுகையாக முதல் 100 நபர்களுக்கு ஆயிரம் மதிப்புள்ள செல்போன்கள் 100 ரூபாய்க்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடந்தனர்.
இதேபோன்று கோவை 100 அடி வீதியில் அமைக்கப்பட்டிருந்த சுப்ரீம் செல்போன் கடையின் மற்றொரு புதிய கிளையையும் நடிகை நிக்கி கல்ராணி குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். அவரை காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்களிடையே பேசிய நடிகை நிக்கி கல்ராணி, கோவைக்கு வந்தது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார்.