உலகின் மிகப்பெரிய தேவாலய மணி
உலக அளவில் மிகப்பெரிய மணிகளுள் ஒன்று போலந்து நாட்டில் கிரகோவ் நகரில் செய்யப்பட்டுள்ளது.
தேவாலயங்களில் பயன்படுத்தக்கூடிய இந்த மணியின் எடை 55,000 கிலோ ஆகும். 'வோக்ஸ் பாட்ரிஸ்' என்று அழைக்கப்படும் இம்மணி, 4 மீட்டர் (13 அடி) உயரமும் 4.5 மீட்டர் விட்டமும் கொண்டது. செம்பு மற்றும் வெள்ளீயம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இது, நான்கு இயந்திரங்களை கொண்டு அசைக்கப்படும்.
பிரேசில் நாட்டில் டிரினிடாட்டில் உள்ள Sanctuary Basilica of the Divine Eternal Father என்ற புகழ் பெற்ற திருத்தலத்திற்காக இது பிரத்யேகமாக செய்யப்பட்டுள்ளது.
இந்த பிரமாண்டமான மணி, போலந்திலிருந்து பிரேசில் நாட்டுக்கு படகில் கொண்டு செல்லப்பட உள்ளது. ஏறக்குறைய ஒரு வருட பயணத்திற்குப் பிறகு இம்மணி பிரேசிலில் உள்ள அந்தத் திருத்தலத்திற்குக் கொண்டு சேர்க்கப்படும் என்று தெரிகிறது.