வெளிநாட்டு மணல் விற்பனையை தொடங்கியது தமிழக அரசு: முக்கிய அறிவிப்பு
தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் மணல் விற்பனையை தமிழக அரசு தொடங்கி உள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கட்டுமானப்பணிக்கு தேவையான மணலை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து பொது மக்களுக்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். இதற்காக டெண்டர் விடப்பட்டது.
மேலும், தமிழ்நாடு சிறு கனிமச் சலுவை விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதியில் இருந்து அமல் செய்யப்பட்டன. இதில் குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணல் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வாங்கப்படும் மணலை தமிழகத்துக்குள் விற்பனை செய்ய பொதுப்பணித் துறை தவிர யாருக்கும் உரிமை கிடையாது என்றும், பொதுப்பணித் துறை நிர்ணயித்துள்ள தகுதிக் குறியீடுகளின்படி மணல் இருக்க வேண்டும் என்றும் அப்படி மீறினால் தமிழகத்திற்குள் மணல் விற்க தடை விதிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்தில் தனியார் நிறுவனம் ஒன்று மணல் இறக்குமதி செய்திருந்தது. இதுதொடர்பான வழக்கு ஒன்று உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி சில உத்தரவுகளை பிறப்பித்தது.
அதன்படி, தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: பொதுமக்கள் கவனத்திற்கு- தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மணல் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மணல் விற்பனைக்காக முன்பதிவு, செப்டம்பர் 21-ந் தேதி (நேற்று) மாலை 4 மணி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த மணலுக்காக, ஜிழிsணீஸீபீ இணையதளத்திலும், கைப்பேசி செயலி மூலமாகவும் ஆன்லைனில் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.
துறைமுகத்தில் முதல்கட்டமாக 11 ஆயிரம் யூனிட் மட்டுமே வழங்கப்பட உள்ளது. முதலில் பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். முன்பதிவு செய்பவர்களுக்கு அடுத்த வாரத்தில் இருந்து மணல் வழங்கப்படும். ஜிழிsணீஸீபீ இணையதளத்தில் பதிவு செய்யாத வாகனங்களுக்கும் மணல் வழங்கப்படும்.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி ஒரு யூனிட் (சுமார் 4.5 டன்) மணல் விலை ரூ.9,990 ஆகும். மேலும், 2 யூனிட் - ரூ.19,980; 3 யூனிட் - ரூ.29,970; 4 யூனிட் - ரூ.39,960, 5 யூனிட் - ரூ.49,950 என்ற விலையில் விற்பனை செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.