தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய வங்கக்கடலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெற்று புயலாக மாறியது. இது நேற்று முன்தினம் நள்ளிரவு ஆந்திரா, ஒடிசா இடையே கரையை கடந்தது.

இந்நிலையில், வங்கக்கடல் பகுதியில் மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளதால் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரிகள் கூறுகையில், "அடுத்த 24 மணி நேரத்தில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். சென்னை பொறுத்தவரை, ஒரு சில இடங்களில் மாலை நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில், அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும்" என்றார்.

More News >>