ஆக்zwnjஷன் பாண்டா.. லவ் பாண்டா.. காதலர் தினத்தில் ரிலீசாகும் ஜேம்ஸ்பாண்ட் -25!
ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் 25வது படமாக வெளியாகவுள்ள புதிய படம் வரும் 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் காதலர் தின பரிசாக உலகமெங்கும் ரிலீஸாகவுள்ளது. இப்படத்தினை கேரி ஃபக்குங்கா இயக்குகிறார்.
ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் கிரேஸ் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், சமீப காலமாக அதன் கிரேஸ் அப்படத்தில் பணிபுரிபவர்களுக்கே இல்லாமல் சென்றுவிட்டது கால மாற்றத்தின் அறிகுறியா என்பது தெரியவில்லை.
பந்தா காட்டிய டேனியல் க்ரெய்க்:
25வது ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடிக்க நான்கு முறை ஜேம்ஸ் பாண்ட் ஆக நடித்த டேனியல் கிரெய்க் முதலில் மறுப்பு தெரிவித்தார். அந்நிகழ்வு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர், வேறு ஆட்களை ஜேம்ஸ் பாண்டாக நடிக்க வைக்க ஆடிஷன்களும் நடத்தப்பட்டன. லேடி ஜேம்ஸ்பாண்ட் என்ற புரளியும் கிளம்பின. இறுதியில் தயாரிப்பாளர்கள், டேனியல் கிரெய்க் கேட்ட ரூ.250 கோடிக்கு ஒப்புதல் அளித்து அவரை ஒப்பந்தம் செய்தனர்.
கழண்டுக் கொண்ட டேனி பாயல்:
ஹீரோ பிரச்னை முடிந்தவுடன் இயக்குநர் பிரசனை தயாரிப்பு தரப்புக்கு மிகப்பெரிய தலைவலியாக அமைந்து விட்டது. 8 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தை இயக்கிய டேனி பாயல் இப்படத்தை இயக்க ஒப்பந்தமானார். ஆனால், கதையாசிரியர்களுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக, இப்படத்தில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார்.
இவராவது நீடிப்பாரா?
இந்நிலையில், ஜேம்ஸ் பாண்டின் 25வது படத்தினை இயக்க இயக்குநர் கேரி ஃபக்குங்கா ஒப்பந்தமாகியுள்ளார். கேரி ஃபக்குங்கா வேறு யாருமல்ல, பிஙிளிவில் மேத்யூ மெக்கனாங்கே நடிப்பில் ஒளிபரப்பான ‘ட்ரூ டிடெக்டிவ்ஸ்’ சீசன் ஒன்றின் இயக்குநர்தான். மேனியக் என்ற தொடரையும் இவர் இயக்கியுள்ளார்.
2020ல் வருகிறார் ஜேம்ஸ்பாண்ட்:
2019ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட ஜேம்ஸ்பாண்ட்-25 படம் பல சிக்கல்களை சந்தித்ததன் காரணமாக அதன் ரிலீஸ் தேதி 2020ம் ஆண்டுக்கு தள்ளிப்போயுள்ளது. இப்படம் பிப்ரவரி 14, 2020ம் ஆண்டு காதலர் தின பரிசாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.