செக்கச் சிவந்த வானம் 2வது டிரெய்லர் ரிலீஸ்!
மணிரத்னம் இயக்கத்தில் மல்டி ஸ்டாரர் படமாக உருவாகியுள்ள ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் இரண்டாவது டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
அரவிந்த்சாமி, அருண் விஜய், விஜய்சேதுபதி, சிம்பு, ஜோதிகா, அதிதிராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா எரப்பா, பிரகாஷ் ராஜ் மற்றும் தியாகராஜன் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள ‘செக்கச் சிவந்த வானம் வரும் வியாழக் கிழமை (செப்டம்பர் 27) திரைக்கு வருகிறது.
இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கலக்கல் ஆல்பத்தை கொடுத்துள்ளார்.
படத்தின் முதல் டிரெய்லர் வெளியாகி வைரலான நிலையில், படத்தின் இரண்டாவது டிரெய்லர் மிரட்டுகிறது. தந்தையும் டானுமான பிரகாஷ் ராஜ் இறப்பது போன்றும், அவரது இறப்பிற்கு மூத்த மகன் அரவிந்த்சாமி காரணமா? என விஜய் சேதுபதி அவரிடம் கேட்பது போன்றும்.
தந்தை இறந்தால், யாருக்கு லாபம் என கடைக்குட்டி மகன் சிம்பு நினைப்பதும், “அண்ணா இத நீதான் ஆரம்பிச்சு வச்ச” என ரத்தம் ஒழுக ஒழுக சிம்பு ஸ்கைப்பில் பேசுவதும் என பட டிரெய்லரில் காட்சிகள் ரத்தம் சொட்டுகிறது.
மேலும், இதற்கு வலுவூட்ட இசைப்புயலின் “செவந்து போச்சு நெஞ்சு” என்ற பேக்ரவுண்ட் பாடல் பதவி வெறியாட்டத்தை கண் முன்னே நிறுத்துகிறது.
படத்தின் ப்ரீ புக்கிங் துவங்கிய நிலையில், ஒருவாரத்திற்கு காட்சிகள் ஹவுஸ் ஃபுல்லாகியுள்ளதாக திரையரங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் 2வது டிரெய்லர் இதோ..