சென்னை ஐஐடியில் கேரள மாணவர் தற்கொலை!
சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜமுனா விடுதியில் தங்கியிருந்த ஷாஜஹான் குர்முத்தின் மகனான ஷாஹித் குர்முத் 23. இவர் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர், தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் சென்னை ஐஐடியில் பெருங்கடல் பொறியியல் பிரிவில் 5 ஆண்டு பட்டப்படிப்பை பயின்று வந்தார்.
முதல்கட்ட விசாரணையில் ஷாஹித் தனது குடும்பப் பிரச்சனை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. இவர் அடிக்கடி தனது பெற்றோர் மற்றும் சகோதரர் உடன் தொலைபேசியில் சண்டையிட்டு வந்துள்ளார். நேற்று இரவு மிகவும் வேதனையுடன் காணப்பட்டாதகவும். அவரது தொலைபேசி அழைப்புகள் எதற்கும் பதிலளிக்கவில்லை எனவும் விடுது நண்பர்கள் கூறியுள்ளார்கள் மேலும் தனது தற்கொலைக்கு காரணமாக எந்தவொரு கடிதமும் விட்டுச் செல்லவில்லை.
அதேசமயம் வருகைப் பதிவேட்டில் போதிய வருகை சதவீதம் இல்லாததால் தற்கொலை செய்து கொண்டதாகவும் வேறு சில காரணங்களும் கூறப்படுகிறது. போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது விசாரணையின் முடிவில் உண்மையான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.