கொடூர நோய்களைத் தீர்க்கும் பூலோக அமிர்தம் எது தெரியுமா?
நவநாகரீக உலகில் பால் குடிப்பதென்பது சிறியவர் முதல் பெரியவர் வரை மிக கொடுமையான விஷயமாக உள்ளது. ஆனால் பால், பல நோய்களை தீர்த்து வராமல் நம்மை காக்கிறது. பால் என்றால் அது தூய்மையான பால் பாக்கெட் பால் அல்ல. முடிந்தவரை பாக்கெட் பாலை வாங்காதீர்கள். அதில் நன்மை என்று கூற ஒன்றும் இல்லை.
உங்களுக்கு தெரியுமா, பூலோக அமிர்தம் என்றால் என்னவென்று???ஆமாம் அது ஆட்டுப்பால் தான். ஆடு பல இடங்களில் மேய்ந்து மூலிகைகளை உண்டு அமிர்தம் எனும் பாலைக் கொடுக்கிறது.
மகாத்மா காந்தி அவர்கள் பருகியதும் ஆட்டுப்பாலைத் தான். அவரது முதுமையிலும் சுறுசுறுப்புடன் இருந்தத்திற்கு காரணம் ஆட்டுப்பாலே.
இன்னும் கிராமங்களில் உள்ளவர்கள் ஆட்டுப் பாலை குடித்து வருகின்றனர். உண்மையில் அவர்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள் தான். ஏனென்றால் இதை படியுங்கள் தெரியும்..!
*ஆட்டுப் பாலை கறந்த உடனேயே பருகும் வசதியுடையவர்கள் அதனுடன் சம அளவு நீர் சேர்த்து காய்ச்சாமலேயே குடித்தால் அதிகமான பலன் கிடைக்கும்.
*வெள்ளாட்டுப் பால் வலிப்பு, புற்றுநோய், நீரிழிவு, சரும நோய்கள், யானைக்கால் நோய், மஞ்சள் காமாலை போன்ற கொடூர நோய்களை குணப்படுத்தும் வல்லமை உடையது.
*ஆண்மை குறைவு உடையவர்கள் வெள்ளாட்டுப் பாலை தொடர்ந்து 3-4 மாதங்கள் தினமும் ஒரு முறை பருகி வர நல்ல பலன் கிடைக்கும்.
இப்படிப்பட்ட மருத்துவ குணங்களைக் கொண்ட ஆட்டுப்பால் உண்மையில் பூலோக அமிர்தம் அல்லவா! தினமும் ஆட்டுப்பாலை பருகி நீண்ட ஆயுளைப் பெறுங்கள். நோய் நொடியின்றி வாழுங்கள்.