சிவகார்த்திகேயனின் அடுத்த பட டைட்டில் இதுதானா ?
சிவகார்த்தியேன் – ராஜேஷ் கூட்டணியில் உருவாகி வரும் எஸ்.கே 13 படத்தின் டைட்டில் ‘ஜித்து ஜில்லாடி’ என இணையத்தில் செய்திகள் வைரலாக பரவி வருகின்றன.
சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற காமெடி ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் ராஜேஷுடன் தனது 13வது படத்தில் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளார். ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக வேலைக்காரன் படத்திற்கு பிறகு மீண்டும் நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார்.
சதிஷ், யோகிபாபு, ராதிகா என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளனர். ஹிப்-ஹாப் தமிழா ஆதி படத்திற்கு இசையமைக்கிறார்.
படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில், இன்று இப்படத்தின் டைட்டில், அட்லி இயக்கத்தில் வெளியான விஜய்யின் ‘தெறி’ படத்தின் ஓபனிங் சாங் என்ற செய்தி சமூக வலைதளத்தில் பரப்பப்பட்டு வைரலாகியது.
இதனை தொடர்ந்து, டுவிட்டரில் இயக்குநர் ராஜேஷ் இதற்கு விளக்களித்துள்ளார். ”படத்தின் டைட்டில் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்” என்றுள்ளார். ஆனால், படத்தின் டைட்டில் ‘ஜித்து ஜில்லாடி’ அல்ல என்றும் அவர் மறுக்கவில்லை என்பதால், படத்தின் டைட்டில் அதுதான் என மீண்டும் நெட்டிசன்கள் கிளம்பியுள்ளனர்.
எதுவாக இருந்தாலும், ‘ஜித்து ஜில்லாடி’ டைட்டில் நன்றாகவே உள்ளது. அதனையே வையுங்கள் என சிவகார்த்திகேயன் ரசிகர்களும் விஜய்யின் ரசிகர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.