பூமராங் படத்திற்காக மொட்டையடித்த அதர்வா!

இயக்குநர் கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடித்து வரும் பூமராங் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. படத்தின் மிக முக்கிய காட்சி இது என்பதால், அதர்வா மொட்டையடித்து புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

நயன் தாராவின் இமைக்கா நொடிகள் படத்தில் அசத்தல் நடிப்பை வெளிப்படுத்திய அதர்வா, தற்போது சேட்டை, இவன் தந்திரன் போன்ற படங்களை இயக்கிய கண்ணன் இயக்கத்தில் பூமராங் படத்தில் நடித்து வருகிறார். தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் நாயகி மேகா ஆகாஷ் இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடி சேர்ந்துள்ளார். மேயாத மான் இந்துஜா, உபேன் படேல், சுஹாசினி, ஆர்.ஜே. பாலாஜி, சதீஷ் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது.

இப்படத்தின் 95 சதவீத படப்பிடிப்புகள் முடிந்து அடுத்த மாதம் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் முக்கிய காட்சி ஒன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் படமாக்கப்பட்டு வருகிறது.

கதைக்கு பெரிதும் வலு சேர்க்கும் பகுதியான இந்த காட்சிக்காக, அதர்வா முதல் முறையாக மொட்டையடித்து நடித்துள்ளார்.

முன்னதாக, பரதேசி படத்திற்காக வித்தியாசமான தலை முடி கெட்டப்பில் அதர்வா அசத்தியது குறிப்பிடத்தக்கது.

அதர்வா இயக்குநர்களின் நாயகன் என்றும், படத்தின் ஒரு காட்சிக்காக மொட்டையடித்ததால், அடுத்த இரண்டு மாதங்களுக்கு வேறு எந்த படத்திலும் அவரால் நடிக்க முடியாது என்றும், இருந்தபோதும், படத்தின் தேவை அறிந்து அதர்வா செய்த இந்த தியாகத்தால், நிச்சயம் அவருக்கு பாராட்டுகள் கிடைக்கும் என இயக்குநர் கண்ணன் புகழாராம் சூட்டினார்.

More News >>