ஈரான் ராணுவ அணிவகுப்பில் தாக்குதல்... 24 பேர் பலி.
ஈரான் ராணுவ அணிவகுப்பில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 24 பேர் உயிரிழந்தனர்.
ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் ஆட்சியின்போது அண்டை நாடான ஈரான் மீது போர் தொடுத்தார். கடந்த 1980-களில் 8 ஆண்டுகள் இந்த போர் நீடித்தது. இந்த போரின் நினைவுநாளையொட்டி, ஈரான் அவாஸ் நகரில் அலுவலகத்தில், ராணுவ அணிவகுப்பு நடந்து கொண்டிருந்தது.
அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 24 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள் உள்பட 45க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் இருவரை கைது செய்த ஈரான் காவல்துறை, அவர்களது புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என தெரிகிறது. எனினும், ஐஎஸ் அமைப்புகள் தாக்குதலை நிகழ்த்தி இருக்கலாம் என ஈரான் உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.