பிரதமர் திருடனா ?... வரலாற்று பிழை - ராகுல் காந்தி

ரபேல் விவகாரத்தில் பிரான்ஸ் முன்னாள் அதிபர், இந்தியப் பிரதமரை  திருடன் என்று கூறியிருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ரஃபேல் விமான விவகாரத்தில் இந்திய அரசு முன்மொழிந்ததால் தான் அனில் அம்பானி நிறுவனத்துடன் வேறு வழியின்றி டசால்ட் நிறுவனம் சேர்ந்து செயல்பட வேண்டியிருந்ததாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹோலண்டே தெரிவித்துள்ளார்.  இந்த கருத்தால் பாஜக - காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். ரபேல் விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இன்று டெல்லியில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, "ரபேல் போர் விமான ஊழலில் பிரதமர் மோடி குற்றவாளி"  என சாடினார்.

"ராணுவத்துறையில் நடந்த ஊழல் குறித்து விளக்கம் அளிக்காமல் மோடி மௌனம் காப்பது ஏன் ?. மோடியை காப்பாற்றவே, ராணுவ அமைச்சர்கள்  பொய் தகவல்களை அளித்து வந்தனர் என்பது தெளிவாக புரிகிறது. இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும். தேவைப்பட்டால்  இந்த விசாரணைக்கு பிரான்ஸ் முன்னாள் அதிபரை அழைக்கலாம்"  என ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக வெளிவரும் தகவல்கள் அனைத்தும் ஆதாரமில்லாதவை என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

More News >>