தர லோக்கல் வடசென்னை ஆல்பம் ரிலீஸ் !
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'வட சென்னை' படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளன.
தனுஷின் வுண்டர்பார் மற்றும் லைகா ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர், கிஷோர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ஞாயிறன்று காலை 11 மணிக்கு வெளியாகின.
மூன்று பாகங்களாக உருவாகி வரும் வடசென்னை படத்தின் முதல் பாகத்தில் மொத்தம் 8 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் 2 தீம் மியூசிக்குகளும் படத்திற்கு வலு சேர்க்கின்றன.
கானா பாலா பாடல் வரிகள் மற்றும் குரலில் ஒலிக்கும் ‘சந்தனத்த’ பாடல், ஐஸ்வர்யா ராஜேஷ் வயசுக்கு வந்த நிகழ்ச்சியில் இடம்பெறும் பாடலாக அமைந்துள்ளது. மற்றொரு பாடலான ‘கோவிந்தம்மாவாலே’ பாடலை ரோகேஷ் லிரிக்ஸில் தனுஷ் பாடியுள்ளார்.
மெர்சல் படத்தில் பாடல் எழுதிய விவேக்கின் பாடல் வரிகளில் ‘கார்குழலாய்’ பாடல்கள் இந்த ஆல்பத்தின் சிறப்பான பாடலாக அமைந்துள்ளது. கானா பாலா லிரிக்ஸில் உருவாகியுள்ள மற்றொரு பாடலான ‘மாடியில நிக்குற மான்குட்டியே’ பாடலை சந்தோஷ் நாராயணுடன் இணைந்து அவருடைய மகள் தியாவும் பாடியுள்ளார்.
சித் ஸ்ரீராம் குரலில் மேஜிக் செய்துள்ளது ‘என்னடி நீ மாயாவி’ பாடல். அடுத்து இடம்பெற்றுள்ள மூன்று பாடல்களும் மாண்டேஜ் பாடல்களாக அமைந்துள்ளன. ‘எப்படியம்மா’ பாடல் அமீரின் இறப்பு குறித்து பாடப்பட்டுள்ளதாக அமைந்துள்ளது. ‘அலங்கார பந்தலிலே’ பாடல், இறுதி ஊர்வலம் அல்லது காரியத்தின் போது பாடப்படும் பாடலாக அமைந்துள்ளது.
அனைத்து பாடல்களும் சென்னை கானாவை அடிப்படையாக கொண்டு வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளன. நிச்சயமாக இந்த ஆல்பம் சந்தோஷ் நாராயணனுக்கு பல விருதுகளை வாரி வழங்கும் என இப்போதே தெரிகிறது.
பாடல்களின் ஜூக் பாக்ஸ் இதோ..