வாட்ஸ் ஆப் குறைதீர்க்கும் அதிகாரி நியமனம்...!
மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று வாட்ஸ்ஆப் நிறுவனம் இந்தியாவுக்கான புகார் குறைதீர்க்கும் அதிகாரியை நியமித்து உள்ளது.
அந்நிறுவனத்தில், சர்வதேச செயல்பாடுகளுக்கான முதன்மை இயக்குனராக உள்ள கோமல் லகிரி என்ற பெண்ணை தற்போது இந்தியாவுக்கான புகார்களை விசாரிக்கும் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.இது தொடர்பாக, வாட்ஸ் ஆப் வெளியிட்டுள்ள செய்தியில் பயனாளிகள் தங்கள் குறைகளை மொபைல் செயலி அல்லது மின்னஞ்சல் வழியே கோமலியை தொடர்பு கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. புகார்களை பதிவு செய்வதற்காக வாட்ஸ் ஆப் செட்டிங்ஸ் பகுதியில் பதிவு செய்ய வசதி உருவாக்கப்பட்டுள்ளது. பயனாளிகளின் புகார்கள் மற்றும் தேவைகளை அமெரிக்காவில் உள்ள இதர தொழில்நுட்ப அதிகாரிகளுடன் ஆலோசித்து கோமல் லகிரி தீர்ப்புகளை வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் மட்டும் 20 கோடி பேர் வாட்ஸ்-அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.