இணையத்தில் வைரலாகும் கலகலப்பு 2 டீசர்

சுந்தர் சி இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் கலகலப்பு2 படத்தின் டீசர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சுந்தர் சி இயக்கத்தின் விமல், சிவா, அஞ்சலி, ஓவியா நடித்த கலகலப்பு திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பபை பெற்றது. இதனால், கலகலப்பு2 விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததை அடுத்து, படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில், ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கல்ராணி, கேதரின் தெரசா, வையாபுரி, மனோபாலா, ரோபோ சங்கர், சந்தான பாரதி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் நேற்று முன்தினம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் ஆதரவை பெற்றுள்ளது. குறிப்பாக, டீசர் முழுவதும் கலர்புல்லாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இதனால், இந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கலகலப்பு2  டீசர்  இதோ..

More News >>