உலகைச் சுற்றும் போட்டி: நடுக்கடலில் தத்தளித்த இந்திய கடற்படை வீரர் மீட்பு

கடல் வழியாக உலகைச் சுற்றி வரும் போட்டியில் பங்கேற்று, நடுக்கடலில் சிக்கிய இந்திய கடற்படை வீரரை பத்திரமாக மீட்டுள்ளனர்.

கடல் வழியாக உலகைச் சுற்றி வரும் கோல்டன் குளோப் சர்வதேச பந்தயம் கடந்த ஜூலை 1ம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில், இந்தியா சார்பில் கடற்படை அதிகாரி அபிலாஷ் டோமி பங்கேற்றார்.

இவர், துரியா என்ற படகு மூலம், கடந்த 84 நாட்களில் 10,500 நாட்டிக்கல் மைல் கடந்து, தெற்கு இந்திய பெருங்கடலில் வந்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென புயல் தாக்கியது.

இதனால், டோமி மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். சுமார் 14 அடி உயரத்திற்கு அலைகள் எழுந்ததாலும், காற்று பலமாக வீசியதாலும், மோமியால் படகை இயக்க முடியவில்லை.

தான் நடுக்கடலில் சிக்கிச் கொண்டிருப்பதை, டோமி இந்திய கடற்படைக்கும், பந்தய ஏற்பாட்டாளர்களுக்கும் உடனடியாக தகவல் தெரிவித்தார். இதன்பிறகு, மொரீஷியஸில் இருந்து இந்திய கடற்படை விமானம் மூலம், தேடியதன் எதிரொலியாக படகு கண்டுபிடிக்கப்பட்டது.

இதனுடன், இந்திய கடற்படைக்கு சொந்தமான 2 கப்பல்கள் மற்றும் ஆஸ்திரேலிய கடற்படை கப்பல் ஒன்றும் டோமியை மீட்க விரைந்து தீவிரமாக தேடும் பணியில் ஈடுப்டடது.இந்நிலையில், ஆஸ்திரேலிய கடற்படை கப்பலும், பிரான்ஸ் பகுதியை நெருங்கின. பின்னர், இன்று பிற்பகல் 1 மணியளவில் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த டோமியை பத்திரமாக மீட்கப்பட்டார்.

இதன் பிறகு, டோமியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், இன்று மாலையளவில் ஆம்ஸ்ட்ராங் தீவுக்கு சென்று, அங்கிருந்து இந்திய கடற்படை கப்பல் மூலம் மொரிஷியஸ் தீவுக்கு சென்று அங்கு மருத்துவ சிகிச்சை அளிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி செய்துள்ளார். மேலும், இந்திய கடற்படை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளது.

More News >>