கடல் மட்டத்திலிருந்து 4,500 அடி உயரத்தில் விமான நிலையம் !

இந்தியாவில் சிக்கிம் மாநிலத்தில் முதல் விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 24ம் தேதி திறந்து வைத்தார்.

இந்தியாவில் சிக்கிமை தவிர அனைத்து மாநிலங்களிலும் விமான நிலையங்கள் இயங்கி வருகின்றன. சிக்கிம் மாநிலத்தில் பாக்யாங் என்ற ஊரில் விமான நிலையம் அமைப்பதற்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தியா - சீனா எல்லையிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலும், மாநில தலைநகர் கேங்டாக்கிலிருந்து 33 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள இவ்விமான நிலையத்தின் மொத்த பரப்பு 201 ஏக்கர் ஆகும்.

605 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள பாக்யாங் விமான நிலையம் அக்டோபர் 4ம் தேதி முதல் இயங்க உள்ளது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 78 இருக்கை கொண்ட விமானத்தை டெல்லி, கொல்கத்தா, கெளஹாத்தி விமான நிலையங்களிலிருந்து தினம்ம் பாக்யாங் கிரீன்பீல்ட் விமான நிலையத்திற்கு இயக்க உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 4,500 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தின் மூலம் சுற்றுலா பெருகும்.

இதை திறந்து வைத்த பிரதமர் 'பொறியியல் அற்புதம்' என்று வர்ணித்துள்ளார். இந்தியாவில் செயல்பாட்டில் இருக்கும் 100வது விமான நிலையம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>